தி வெஸ்டெர்ன் காட்ஸ் பள்ளியின் சார்பில் "வன மஷோத்சவ்" மரம் நடும் விழா கொண்டாட்டம்

தி வெஸ்டெர்ன் காட்ஸ் சர்வதேச பள்ளியின் இயற்கை மன்றத்தின் சார்பில் "வன மஹோத்சவ்" எனப்படும் மரம் நடும் விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் ஹேமலதா சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 8ம் வகுப்பு மாணவி சம்யுக்தா எஸ்.சாம்ராஜ் வரவேற்புரையாற்றினார்.



கோவை பசுமை இயக்கத்தின் நிர்வாகிகள் சுஜாதா, ராம்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். காணோலி காட்சி மூலம் மரங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விருந்தினர்கள் எடுத்துரைத்தனர். 

சிறப்பு விருந்தினர்கள் மற்றும் இயற்கை மன்ற உறுப்பினர்கள் பள்ளி வளாகத்தில் 60 மரக்கன்றுகளை நட்டனர். மேலும், இயற்கை காய்கறி தோட்டத்தில் காய்கறி விதைகளை விதைத்தனர்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, இயற்கை மன்ற மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த மரக்கன்றுகளை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர். விருந்தினர் முன்னிலையில் மரக்கன்றுகளை வைத்து பராமரிப்போம் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

நிறைவாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் 8ம் வகுப்பு மாணவி மெலோடிகா விஜயன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...